திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு கடிதம்
திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவின் 60-வது ஆண்டு நினைவாக, தமிழக அரசின் சார்பில் பூங்காவில் அவரது முழுஉருவ சிலை அமைத்து தரக்கோரி திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, திருச்செந்தூர் தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் கடிதத்தை போட்டனர். வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை கடிதம் அனுப்பும் இயக்கம் தொடர்ந்து நடைபெறும் என்று அமைப்பின் தலைவர் முரசு தமிழப்பன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் ராஜ்குமார், அமைப்பின் செயலாளர் வேம்படி முத்து, பொருளாளர் இளந்தளிர் முத்து, இளையராஜா, தமிழ் பருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.