விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பார்ப்பனச்சேரி கவுண்டர் பண்ணை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 38). விவசாயியான இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிஷாந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததையடுத்து, நிஷாந்தினி தற்போது திருப்பூரில் தனியாக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் பூபதி மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.