சிவகாசி
சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னாண்டி(வயது 66). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சின்னாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போது அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.