சிவகாசி, விருதுநகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகாசி, விருதுநகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-01-03 19:40 GMT
சிவகாசி
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகாசி, விருதுநகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம்
சிவகாசி மின்கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லியநாயக்கன்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் பாதிக்கப்படும். அதேபோல் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதியில் மின்சாரம் வினியோகம் தடைப்படும். இந்த தகவலை சிவகாசி மின்வாரிய அதிகாரி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, செவலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் (பொறுப்பு) பாபு தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் முடங்கியார் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
இதனால் இந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் பகுதி, ராஜூக்கள் கல்லூரி பகுதி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன சுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பழையபாளையம், மாடசாமி கோயில் தெரு, ஆவரம்பட்டி, ெரயில்வே பீடர் சாலை, மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், பெரிய கடை பஜார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்