நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா

Update: 2022-01-03 18:05 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 599 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் சேர்க்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 600 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று இம்மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். எனவே இதுவரை 53 ஆயிரத்து 897 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 518 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 203 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்