விபத்தில் சிக்கிய லாரி டிரைவர்
நாட்டறம்பள்ளி பகுதியில் விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் போராடி மீட்கப்பட்டார்.
ஜோலார்பேட்டை
மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஷோராவ். இவரது மகன் அனுமந்த ராவ் (வயது 26). லாரி டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கார்களை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பைபாஸ் - மேம்பாலத்தில் முன்னால் சென்றுகொண்டு இருந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் டிரைவரின்கால் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமையில் சென்று உருக்குலைந்த லாரியின் முன்பகுதியை கடப்பாரையால் உடைத்து லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.