எருமப்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி பெயிண்டர் பலி

எருமப்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி பெயிண்டர் பலி

Update: 2022-01-03 18:01 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே மோட்டார் மீது சுற்றுலா வேன் மோதி பெயிண்டர் பலியானார்.
பெயிண்டர்
நாமக்கல் ராமாபுரம் புதூர் கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மகன் சுதர்சன் (வயது 20). பெயிண்டர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுதர்சன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொன்னேரி கைகாட்டி அருகே தனியார் ஸ்பின்னிங் மில் பகுதியில் சென்றபோது அந்த வழியாக கொல்லிமலையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சுற்றுலா வேன் சுதர்சன் ஓட்டிசென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. 
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுதர்சனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்