பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 232 மனுக்கள் பெறப்பட்டன
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் உதவி தொகைகள், வீட்டு மனை பட்டா, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 232 மனுக்களை வழங்கினர். தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஊத்தங்கரை தாலுகா சந்திரப்பட்டியை சேர்ந்த 5 நரி குறவர் இன மக்களுக்கு மாதாந்திர உதவி தொகை, தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 2 பழங்குடியின நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, தனி துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.