கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது

கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது

Update: 2022-01-03 16:31 GMT
கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது
ஆனைமலை

ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது26). கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் மாகாளி அம்மன் கோவில் மதில் சுவர் மீது ஏறி குதித்துள்ளார். பின்னர் கோவில் கதவை உடைத்து திருட முயற்சி செய்ததாக தெரிகிறது.

 அப்போது அங்கு வந்த பொது மக்கள் ஜேசுதாசை கையும் களவுமாகப் பிடித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆனைமலை போலீசார்  ஜேசுதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய

மேலும் செய்திகள்