வெறிநாய் கடித்து 28 ஆடுகள் சாவு

குஜிலியம்பாறை அருகே வெறிநாய் கடித்து 28 ஆடுகள் செத்தன.

Update: 2022-01-03 16:25 GMT
குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டை- செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). இவர், இதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் கிடை அமைத்து 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். 

நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று வந்த செம்மறி ஆடுகளை கிடையில் அடைத்து விட்டு காளியப்பன் வீட்டுக்கு சென்று விட்டார். 

நேற்று காலை கிடையில் வந்து பார்த்தபோது செம்மறி ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெறிநாய் கடித்து 28 செம்மறி ஆடுகள் இறந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து அனைத்து ஆடுகளின் உடல்களும் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. பலியான செம்மறி ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்