மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்கள் மாயம்

மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்த சென்னை வாலிபர்கள் 2 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

Update: 2022-01-03 14:29 GMT
மீன் பிடித்தனர்

மீஞ்சூர் அருகே மணலி புதுநகர் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான வளர்ப்பு மீன்கள் கிடைப்பதால் சிலர் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மணலி புதுநகர் அருகே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், வியாசர்பாடியை சேர்ந்த நிவாஸ் (வயது 22) என்பவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து விட்டார்.

2 பேரை தேடுகின்றனர்

அப்போது உடனிருந்த வியாசர்பாடியை சேர்ந்த அவரது நண்பரான அஜித் (21) ஆற்றில் குதித்து நிவாசை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் விழுந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிவாஸ் மற்றும் அஜித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்