2021-ம் ஆண்டில் விபத்தில் 43 பேர் பலி
சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் விபத்தில் 43 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் விபத்தில் 43 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவகாசி உட்கோட்டம்
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், அனைத்து மகளிர் காவல் நிலையம், மாரனேரி, எம்.புதுப்பட்டி ஆகிய 6 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் மாரனேரியில் 264 வழக்குகளும், எம்.புதுப் பட்டியில் 186 வழக்குகளும், சிவகாசி கிழக்கில் 569 வழக்குகளும், சிவகாசி டவுனில் 531 வழக்குகளும், திருத்தங்கலில் 580 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைகள்
சிவகாசி உட்கோட்டத்தில் 120 குற்ற வழக்குகளும், 189 விபத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்துக்களில் 43 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அதேபோல் 9 கொலை சம்பவங்களும் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். 65 பேர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனை செய்த 31 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிவகாசி உட்கோட்டத்தில் லாட்டரி விற்பனை இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
அதேபோல் கஞ்சா விற்பனை செய்த 67 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 232 பேர் மீது அனு மதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.