நெல்லை டவுனில் மூதாட்டி வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

Update: 2022-01-02 20:30 GMT
நெல்லை:
நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (வயது 64). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்