கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Update: 2022-01-02 18:32 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த ராஜாகோவில் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த சோமநாதன் (வயது 32), ரிக்கி (20) என்பதும், ஆம்பூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்திய சோமநாதன், ரிக்கி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்