காவேரிப்பாக்கம் பகுதியில் தடுப்பூசி போடும் பணிைய கலெக்டர் ஆய்வு

தடுப்பூசி போடும் பணிைய கலெக்டர் ஆய்வு

Update: 2022-01-02 18:31 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. அதில் காவேரிப்பாக்கம், பாணாவரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக ெசன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. அந்தப் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கலெக்டர் கூறுகையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் காலக்கெடு முடிந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் ஒவ்வொரு நபரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. அதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
ஆய்வின்போது பேரூர் செயல் அலுவலர் மனோகரன், வருவாய்த் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்