74,800 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி; இன்று தொடங்குகிறது
74,800 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் செலுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை,
பள்ளி செல்லும் மாணவர்கள் 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதன்படி 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்காக இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 74,800 மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி 2 தவணைகளாக செலுத்தப்பட உள்ளன. மேலும், அந்தந்த பள்ளிகளில் முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து உள்ளார்.