திருச்செங்கோடு அருகே விபத்தில் ரிக் தொழிலாளி பலி

திருச்செங்கோடு அருகே விபத்தில் ரிக் தொழிலாளி பலி

Update: 2022-01-02 18:02 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு குமரமங்கலம் பகுதியில் இருந்து சித்தாளந்தூருக்கு ரிக் தொழிலாளி நல்லமுத்து (வயது 50) என்பவர் மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்