கார் மோதி 2 பேர் பலி
சீர்காழி அருகே கார் மோதி 2 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அருகே கார் மோதி 2 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கார் மோதி 2 பேர் பலி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 47) இவரும், இவருடைய மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய 4 பேரும் காரில் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். சீர்காழி அருகே காருகுடி கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிக்குமார், காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கீழசாலை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (64), கருகுடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகியோர் மீது மோதிவிட்டு, அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மகாலிங்கம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
கார் ஆற்றில் கவிழ்ந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் ஓடிவந்து காரினுள் காயத்துடன் இருந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.