திருக்கோவிலூர் அருகே கோஷ்டி மோதல் 25 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே கோஷ்டி மோதல் 25 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கீழையூர் பகுதியை சேர்ந்தவர் முத்தன் மகன் சுதாகர்(வயது 55). இவருடைய தங்கை செல்வி குடும்பத்துக்கும், தாசர்புரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கக்கன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கக்கன், அரசன், இவரது மனைவி சுகந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து சுதாகரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கக்கன் உள்ளிட்ட 3 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் தாராபுரம் குப்புசாமி மகன் அரசன் கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா, சுதாகர், ராஜேஷ் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.