தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-02 16:40 GMT
கோத்தகிரி

1-7-21 முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.425.40 பைசா வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அந்த உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதிய தொகையை வழங்க கோரி பிளாண்டேஷன் லேபர் அசோசியேசன் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கூடலூர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. 
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். தலைவர் குணசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பிளாண் டேஷன் லேபர் அசோசியேசன் தலைவர் முகமது ரவிச்சந்திரன் டேவிட் உன்னிகிருஷ்ணன் மற்றும் பக்ருதீன் இஸ்மாயில், சலீம், ராஜன், ஜெயக் கொடி, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரேவதி நன்றி கூறினார்.
கோத்தகிரியில் ஏ.ஐ.டி.யூ.சி. தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏரியா கமிட்டி செயலாளர் பெனடிக்ட் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் போஜராஜ் பேசினார். இதில் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மொரச்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சோசலிச தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்க தலைவர் கரு.வெற்றிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பந்தலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.டயுள்யூ.சி தொழிற்சங்க பொதுசெயலாளர் சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் யோகேஸ்வரன், அமல்ராஜ், ஐ.என்.டி.சி. மாநில பொதுசெயலாளர் நல்லமுத்து, நிர்வாகி லோகநாதன் சி.ஐ.டி.யூ. மாவட்டதலைவர் ரமேஷ். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் பெரியசாமி, மாவட்டசெயற்குழு உறுப்பினர் முத்துகுமார், எல்.பி.எப். நிர்வாகிகள் கணபதி, சந்திரசேகர், தமிழ்வாணன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்