வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

Update: 2022-01-02 16:37 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு 10-க்கும் குறைவாக காணப்பட்டது. ஆனால் மாத இறுதியில் 20-க்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி 23 பேருக்கும், 31-ந் தேதி 22 பேருக்கும், நேற்று முன்தினம் 16 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அதாவது ஒரேநாளில் 71 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், வேலூர் மாநகராட்சி பகுதியில் 32 பேர் அடங்குவர். 71 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன்பணிபுரிந்த அனைவரும் வீடுகளில் தனிமைப்பட்டனர்.

71 பேரில் 48 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வேலூருக்கு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக வந்த வெளிமாவட்டம், பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்