அய்யா வைகுண்டர் சுவாமி பதியில் பால்முறை திருவிழா தொடக்கம்
அய்யா வைகுண்டர் சுவாமி பதியில் பால்முறை திருவிழா தொடக்கம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியில் அய்யா வைகுண்டர் சுவாமி பதி உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் பால்முறை வைபவம் திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக அய்யா வைகுண்டருக்கு துளசி மற்றும் பிச்சுப்பூ மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பணிவிடை நடந்தது. பின்னர் தேங்காய், பழம் வைக்கப்பட்டது. இதையடுத்து மதியம் மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு மற்றும் 1 மணிக்கு சட்டம் சொல்லுதல் நடந்தது. இதையடுத்து 2 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. இரவு சிறப்பு பணிவிடை மற்றும் உகப்படிப்பு நடந்தது. விழாவில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிபணிவிடை, 1 மணிக்கு சட்டம் சொல்லுதல், 2 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு உகப்படிப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சியான பால் முறை வைபவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்து வருகின்றனர்.