லோயர்கேம்ப்பில் புதர் மண்டி கிடக்கும் பென்னிகுவிக் மணிமண்டபம்
லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் புதர் மண்டி கிடக்கிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு தமிழக அரசு சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணிமண்டபத்தை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்குள்ள முல்லைப்பெரியாறு அணை வரைபடங்கள், அணையின் மாதிரி வடிவமைப்பு, இயற்கை சூழல்களை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
பென்னிகுவிக்கின் 181-வது பிறந்தநாள் விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பென்னிகுவிக் மணிமண்டபம் முழுவதும் வர்ணம் பூசும்பணி நடைபெற்று வந்தது. ஆனால் பென்னிகுவிக்கின் முழு உருவ வெண்கல சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெறவில்லை. மேலும் மணிமண்டபத்தை சுற்றியுள்ள புல்வெளிகளில் புதர்மண்டி கிடக்கிறது. இது மணிமண்டபத்தை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே. பென்னிகுவிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வர்ணம் பூச ேவண்டும் என்றும், புதர் மண்டி கிடப்பதை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.