போடியில் தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு

போடியில் தோட்டத்துக்குள் மலைப்பாம்பு புகுந்தது.

Update: 2022-01-02 13:06 GMT
போடி:
போடியில் குரங்கணி சாலையில் அழகர்சாமி ‌என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நேற்று மதியம் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து ‌ அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பதறியடித்து ஓடினர். 
இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அங்கு பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 

மேலும் செய்திகள்