ஆங்கில புத்தாண்டையொட்டி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

காஞ்சீபுரம் மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-01-02 12:39 GMT
இதில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கொரோனா, ஒமைக்ரான் நோய் ஒழிய வேண்டியும் பெரிய லிங்கத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் தலைவர் ஆர்.புருஷோத்தமன், கோவில் அர்ச்சகர் கே.பிரசன்ன குமார், ஆகியோர் முன்னிலையில் விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

மேலும் இங்குள்ள விநாயகர், ராகு, கேது, நவகிரகங்கள் ஆகியோரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், தவளேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், தும்பவனத்தம்மன், வரதராஜபெருமாள், மற்றும் 108 திவ்ய தேச கோவில்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும் செய்திகள்