எண்ணூர் சின்னஅம்மன் கோவிலில் 1 லட்சம் வெற்றிலைகளால் அலங்காரம்

எண்ணூர் சின்னஅம்மன் கோவிலில் 1 லட்சம் வெற்றிலைகளால் அலங்காரம் செய்தனர்.

Update: 2022-01-02 09:09 GMT
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் பழமையான சின்ன அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மீனவ மக்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்களுடன் ஓன்று சேர்ந்து கொரோனா மற்றும் ஓமைக்ரான் ஆகியவற்றை உலகத்தை விட்டே விரட்டி, பொதுமக்களை காக்கும் வகையில் கோவில் மற்றும் அம்மனை சுற்றிலும் 1 லட்சம் வெற்றிலைகளால் அலங்காரம் செய்தனர். பெண்கள், குழந்தைகள் என ஏராளான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்