தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு

தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-01 20:37 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் மார்க்கெட்ரோடு முத்தாணிவிளையை சேர்ந்தவர் தன்சிலால் (வயது 55). இவருடைய வீட்டு வளாகத்தில் குழித்துறை நகர தி.மு.க. கட்சி அலுவலகம் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று மார்த்தாண்டம் தட்டாக்குடி இறக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் தன்சிலாலின் வீட்டு வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு கட்டப்பட்டிருந்த அமைச்சர் மனோ தங்கராஜ் படம் தாங்கிய விளம்பர பதாகையை கிழித்து வீசியதுடன் கட்சி அலுவலகத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். அதை தன்சிலாலும் அவர் மனைவி மற்றும் மகன் சினு ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அவர்களை அந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தன்சிலால் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ராஜேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்