சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன்

Update: 2022-01-01 20:23 GMT
அழகர்கோவில்
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இங்கு நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சாமி தரிசனம் செய்தனர். இதில் கள்ளழகர் பெருமாள், ேதவியர்களுக்கும், விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் பக்தர்கள் புனித நீராடினர். இதைதொடர்ந்து அங்கு அமர்ந்த நிலையில் உள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
மேலும் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

மேலும் செய்திகள்