பட்டிவீரன்பட்டி அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
பட்டிவீரன்பட்டி அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் பலியானார்.
பட்டிவீரன்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 31). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பக்தர்களுடன் சேர்ந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று காலை ராஜா மற்றும் பக்தர்கள் குழுவினர் வத்தலக்குண்டு பகுதியில் இருந்து செம்பட்டி நோக்கி நடந்து சென்றனர்.
பட்டிவீரன்பட்டி அருகே சிங்காரக்கோட்டை பகுதியில் ராஜா நடந்து வந்தபோது, அந்த வழியே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.