கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் கூடுவது வழக்கம். ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆண்டின் முதல் சூாியோதயத்தை காண நேற்று திரிவேணி சங்கமம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆள் நடமாட்டம் இன்றி திரிவேணி சங்கமம் பகுதி வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.