நிலத்தகராறில் வாலிபர் அடித்துக்கொலை
ஆலங்காயம் அருகே நிலத்தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
ஆலங்காயம் அருகே நிலத்தகராறில் வாலிபர் அடித்து கொைல செய்யப்பட்டார்.
பெண் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் மான்சுனை வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன்கள் தமிழரசன் (வயது 30) மற்றும் முரளி, ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இருவரின் குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை குறித்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலை வழக்கம்போல் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த தமிழரசனுக்கும், முரளியின் மனைவி மேகலா, அவரது அக்காள் நவநீதம், முரளியின் மாமியார் இந்திரகுமாரி, மாமனார் நாகராஜி ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் 4 பேரும் சேர்ந்து தமிழரசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த தமிழரசன் மயக்கமடைந்துள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிேசாதனை செய்தபோது தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
தமிழரசனை தாக்கி கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி ஆலங்காயம் போலீஸ் நிலையத்தை, 100-க்கும் மேற்பட்ட நபர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் குற்றவாளிகளை கைது செய்யாமல், தமிழரசனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மேகலா உள்பட 4 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். அதன்பின் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் தமிழரசனின் உடலை போலீசார் விரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.