கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி

ஆரணி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-01-01 17:48 GMT
ஆரணி

ஆரணி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன். அவரது மகன் பத்மநாபன் (வயது 28), மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இவரும் இவரது தம்பி வில்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகிய 3 பேரும் ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

ஆரணி-ஆற்காடு சாலையில் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

 வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பத்மநாபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படுகாயம் அடைந்த வில்வநாதன், சக்திவேல் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். 

விபத்தில் பலியான பத்மநாபனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்