தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்கு எரியாததால் திருட்டு
சின்னமனூர் நகராட்சி சாமிகுளம் முதல் தெருவில் கற்பக விநாயகர் கோவில் அருகே உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. அதை பயன்படுத்தி தெருவில் நிற்கும் வாகனங்களில் இருக்கும் பொருட்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர். பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
-பேச்சிமுத்து, சின்னமனூர்.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ஸ்கீம் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமாட்சி, நாகல்நகர்.
பயன்படாத சுரங்கப்பாதை
திண்டுக்கல்-திருச்சி சாலையில் நேருஜிநகர் ரவுண்டானா அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. இதுவரை அந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, உடைந்த மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இதை சரிசெய்து சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலையில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து சாலையில் ஓடுகிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-மகாலட்சுமி, திண்டுக்கல்.