பிளஸ்-2 மாணவிக்கு கட்டாய திருமணம்: வாலிபர் உள்பட 4 பேர் கைது
பிளஸ்-2 மாணவிக்கு கட்டாய திருமணம்: வாலிபர் உள்பட 4 பேர் கைது
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு முனியப்பன் (23) என்ற தொழிலாளியுடன் கட்டாய திருமணம் நடந்ததாக சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவிக்கு திருமணம் நடந்து இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்ட வாலிபர் முனியப்பன், அவருடைய தாத்தா லட்சுமணன் (65), பாட்டி வசந்தா (55), உறவினர் தர்மன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.