கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை

உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது.

Update: 2022-01-01 17:20 GMT
உடுமலை
உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது.
புத்தாண்டு ஆராதனை
உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம்  நள்ளிரவும், நேற்று காலையிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை, திருப்பலி ஆகியவை நடந்தது.
உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் பள்ளபாளையத்தில் உள்ள தூய பவுல் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.  இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு திருப்பலி
உடுமலை தளி சாலையில் உள்ள அற்புத அன்னை ஆலயம், வி.வி.லே-அவுட்டில் உள்ள புனித செபஸ்தியர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோன்று பல இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.

மேலும் செய்திகள்