பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
குமரலிங்கம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
சுகாதார சீர்கேடு
நம் அன்றாடம் வாழ்வில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதோடு தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்தது.
மாசில்லா தூய்மையான சுகாதாரமான தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
கடும் நடவடிக்கைகள்
இதுகுறித்து மடத்துக்குளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- "சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அந்த பொருட்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு, கணியூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் விற்கப்படுவதுடன் பொதுவெளியில் இதன் பயன்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.