டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி

டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-01 15:07 GMT
ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகே ஆனந்தூர்- மேல் பனையூர் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு ராஜகோபால், நாகராஜன் ஆகி யோர் விற்பனையாளராக பணி புரிந்து வருகின்றனர் இவர்கள் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து  வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற அழகா புரியை சேர்ந்த சேகர் என்பவர் விற்பனையாளருக்கு  டாஸ் மாக் கடை கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக போனில் தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து கடையின் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் கடையை திறந்து பிராந்தி பாட்டில்களை சரிபார்த்த போது எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்