ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2022-01-01 13:05 GMT
ஊட்டி

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சீனிவாசப்பெருமாள் கோவில்

நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 2022-ம் ஆண்டு தொடங்கியது. புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். ஊட்டி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். 

பக்தர்கள் தரிசனம்

சிறப்பு பூஜையை ஒட்டி மூலவரான மாரியம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு பணியாளர்கள் தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பக்தர்களை அறிவுறுத்தினர். அதேபோல் ஆங்கில புத்தாண்டையொட்டி லோயர் பஜார் சுப்பிரமணியசுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்