கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2022-01-01 11:44 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
தூத்துக்குடி சின்ன கோவிலில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதில் முன்னாள் மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் உட்பட ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
மேலும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நேற்று காலையிலும் மக்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
சாயர்புரம் ஏழாம் நாள் திருச்சபையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகர் மாணிக்கம் ஆரம்ப ஜெபம் செய்து தேவ செய்திகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்