குழித்துறை ஆற்றில் பழமை வாய்ந்த சரஸ்வதி தேவி சிலை கண்டெடுப்பு
ஆற்றில் பழமை வாய்ந்த சரஸ்வதி தேவி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்து பாலம் அருகே நேற்று ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி தேவி சிலை ஒன்று தண்ணீரில் மூழ்கி கிடந்ததை அவர் பார்த்தார்.
பின்னர் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு ஏராளமானோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கு திரண்டு வந்து அம்மன் சிலையை பார்த்தனர்.
இதனை தொடர்ந்து அந்த சிலை ஆற்றின் படித்துறையில் உள்ள ஒரு கல்லின் மீது வைக்கப்பட்டது. அந்த சிலை 3 அடி உயரமாக இருந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த பழமை வாய்ந்த சிலையை கடத்தி வந்த கும்பல் ஆற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறையினர் இந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.