சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாதர் சாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே வாழவந்தாள் புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.
சாமி தரிசனம்
அதேபோல சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர் சிவன் கோவில் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
சிவன் கோவிலில் நந்தி பகவானுக்கு பால் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.