சிவகாசி மாநகராட்சியில் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள்

புதியதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் புதிய வார்டு பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-12-22 18:38 GMT
சிவகாசி
புதியதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் புதிய வார்டு பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிவகாசி நகராட்சியில் 33 வார்டுகள் இருந்த நிலையில் 58 ஆயிரத்து 700 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. நூற்றாண்டை கொண்டாடி வந்த நிலையில் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அருகில் உள்ள திருத்தங்கல் நகராட்சி சிவகாசியுடன் சேர்க்கப்பட்டது. இங்கு சுமார் 55 ஆயிரத்து 300 வாக்காளர்கள் இருந்தனர். 
கடந்த 2 மாதங்களாக சிவகாசி மாநகராட்சி செயல்பட்டு வரும் நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கும் தேர்தல் நடத்த வசதியாக அதற்கான வார்டு வரையறை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது.
வாக்காளர்கள்
சிவகாசி மாநகராட்சி பகுதியில் தற்போது 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒவ்வொரு வார்டுக்கும் சரா சரியாக 2400 வாக்காளர்கள் வீதம் பிரிக்கப்பட்டு தற்போது 48 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளில் எந்தெந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து மாநகராட்சி சார்பில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 
இதில் சிவகாசி மாநகராட்சியின் முதல் வார்டு திருத்தங்கல் பகுதியிலும், 48-வது வார்டு சிவகாசி பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த விவரங்களை அரசியல் கட்சியினர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பதிவிட்டு வருகிறார்கள்.
9 பஞ்சாயத்துக்கள்
சிவகாசி மாநகராட்சியுடன் ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், செங் கமலநாச்சியார்புரம், பள்ளப்பட்டி, நாரணாபுரம், அனுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய 9 பஞ்சாயத்து பகுதிகள் சேர்க்கப்பட்ட நிலையில் மாநகராட்சி தேர்தல் சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்கு மட்டும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. சிவகாசி மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது அதிகபட்சமாக சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்