மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் சங்கிலி பறிப்பு; போலீசில் புகார்
அரவக்குறிச்சி அருகே மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி
மூதாட்டி மயக்கம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிபட்டி கோட்டையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்னே அமர்ந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அங்கு வந்து லட்சுமியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டே லட்சுமியிம் தண்ணீர் கேட்டனர்.
பின்னர் அவர் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து லட்சுமிக்கு தாங்கள் கொண்டு வந்த குளிர்பானத்தை கொடுத்தனர். அதனை வாங்கி குடித்த லட்சுமி மயக்கம் அடைந்தார்.
சங்கிலி பறிப்பு
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து லட்சுமி எழுந்து பார்த்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கசங்கிலியை 2 பேரும் சேர்ந்து பறித்து சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து லட்சுமியின் மகன் மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டியிடம் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.