இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நடராஜ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் போடிதாசன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணியகாரன்பட்டி பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷமிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.