40 மூடை ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது

சிவகங்கை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 40 மூடை ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-22 17:29 GMT
சிவகங்கை, 
சிவகங்கை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 40 மூடை ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ண ராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சுரேஷ், ஏட்டு சரவணகுமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன குன்றக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
 அப்போது அந்த வழியில் வந்த மினி லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் 40 மூடை ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. 
கைது
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் சிவகங்கையை சேர்ந்த பால சரவணன் (வயது42) மற்றும் லாரியில் அரிசியை கடத்தி வந்த மூர்த்தி (44) ஆகிய 2 பேரை கைது செய்து லாரியுடன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். 
கைப்பற்றப்பட்ட அரிசி மூடையை சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்