பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2021-12-22 13:09 GMT
கோவை

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மாவட்ட தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கணக்கு அதிகாரி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கால நிர்ணய பதவி உயர்வு திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஊதிய விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும். துணை பொது மேலாளர் பதவிகளுக்கான நேரடி நியமன விதிகளை நீக்க வேண்டும். 

இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி மற்றும் இளநிலை கணக்கியல் அதிகாரி ஆகிய இடங்களுக்கான பதவி உயர்வு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தற்காலிக பதவி உயர் அளிக்காமல் நிரந்தர பதவி உயர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதில் பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி, பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க செயலாளர் காவேட்டி ரங்கன், ‘சஞ்சார் நிகாம்’ அதிகாரிகள் சங்க செயலாளர் ஷியாம் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்