கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைது
கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி கனிமொழி (வயது 30). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரை கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்த கருப்பன் மகன் வீமராஜா (38) என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீமராஜாவை கைது செய்தனர்.