திருவலத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய தனியார் தொழிற்சாலை ஊழியர் கைது
மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய தனியார் தொழிற்சாலை ஊழியர் கைது
திருவலம்
திருவலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை துற்புறுத்திய தனியார் தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார். மாமனார், மாமியார் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 30). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கும் நந்தியாலம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நர்மதா (20) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் நர்மதா போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தனது கணவர் யுவராஜ், தன்னை தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கித் தரச்சொல்லி அடித்து துன்புறுத்துகிறார். தனக்கு குழந்தை இல்லை என்று சொல்லி திட்டுவதுடன், தான் குழந்தை உண்டானதை கருக்கலைப்பு செய்ததாகவும், இதற்கு தனது மாமியாரும், மாமனாரும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதைக்கேட்க வந்த தனது தாய், தந்தையை மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர் கைது
அதன்பேரில் திருவலம் போலீசார் யுவராஜ், அவருடைய தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிரு செய்து யுவராஜை கைது செய்தனர். நர்மதாவின் மாமனார் துரைராஜ், மாமியார் திலகவதி ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.