திண்டுக்கல்:
மழைக்கு பின் பனி என்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வந்த மழை ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 7 மணி வரை சாலையில் எதிரே வாகனங்கள் தெரியாத வகையில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஆதவன் உதிக்கும் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல்லின் அடையாளமாக திகழும் மலைக்கோட்டையை பனி சூழ்ந்த ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம். (இடம்-கொட்டப்பட்டி)