பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

Update: 2021-12-21 16:36 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் அதிகரித்து இருந்தது. காங்கேயம் காளை ஒன்று ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. 

மாட்டு சந்தை


பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் மாடுகளை உள்ளுர் விவசாயிகள், வியாபாரிகளும் வாங்கி செல்வார்கள்.
இதை தவிர கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் விற்பனையும் மும்முரமாக நடந்தது. வரத்து அதிகரித்தும், விலை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

காங்கேயம் காளை 


கார்த்திகை மாதம் பிறந்த பிறகு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது இருந்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த வாரம் 1000 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சந்தைக்கு கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சந்தைக்கு 2500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
காங்கேயம் காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. இவ்வாறு அவர் கூறினார்கள்.

மேலும் செய்திகள்